• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியலையே பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப பிடித்த சீரியல்- அடடே இது சூப்பர் சீரியலாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.அத்தோடு பல சீரியல்கள் முன்னணியிலும் இருக்கின்றது. அந்த வகையில் கடந்த பல மாதங்களாக டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்து வந்த தொடராக பாக்கியலட்சுமி சீரியல் காணப்பட்டது.

அதில் தொடர்ந்து கோபி கொடுத்த ரியாக்ஷன், பாக்கியாவின் முன்னேற்றம் என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.ஆனால் சமீப வாரங்களாக பாக்யா காலேஜுக்கு சேரும் காட்சிகள் தான் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பரபரப்பான காட்சிகள் எதுவும் இல்லாமல் ரசிகர்களுக்கு போர் அடித்து வருகிறது .


இந்த நிலைநிலையில்  தற்போது சிறடிக்க ஆசை தொடர் பாக்யலட்சுமியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. Urbanல் 9.2 மற்றும் ஒட்டுமொத்தமாக Urban + Rural ரேட்டிங் 7.93 புள்ளிகள் பெற்று சிறகடிக்க ஆசை தற்போது முதலிடத்தை பிடித்திருக்கிறது.

சமீபத்தில் திருமண காட்சிகள் ஒளிபரப்பன நிலையில் தற்போது சீரியல் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. அத்தோடு முத்து மீனாவை தற்பொழுது தான் புரிந்து கொண்டு வாழவும் ஆரம்பிக்கின்றார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement