90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காதல் கோட்டை, சூர்யவம்சாம், நீ வருவாய் என உள்பட 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். எனினும் குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. தற்போதும் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது பது அர்த்தங்கள் எனும் சீரியலில் நடித்து வரும் தேவயானி, அவ்வப்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அப்படி, 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சூர்ய வம்சம்.மேலும் இந்த படத்தில், நாயகி தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ்கை நடத்தும் நேரத்தில், வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார். அதை சாப்பிட்டு அவர் வெகுவாக பாராட்டுவார்.
மேலும் இந்த படத்திற்கு பின் இட்லி உப்புமா ஃ பேமஸ் ஆனது. இது குறித்து, தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''இட்லி உப்புமா (கலகல சிரிப்பு) இயக்குநர் விக்ரமனோட எண்ணம் தான், அவரோட கான்செப்ட் தான். என்னுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். எனக்கே ரொம்ப பேவரைட் டிஷ் தான் என்றார்.
பிற செய்திகள்
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- ஷாக்கில் பாக்கியா செய்த வேலை-கதறி அழும் ஈஸ்வரி – பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட்
- நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஊர்சுத்தும் நடிகர் அருண்-வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!