• Sep 21 2024

நடிகை நித்யா மேனனா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நித்யா மேனன்.இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் கூட. படங்கள் தவிர்த்து வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.எதிலும் நடித்தாலும் ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுவிடுகிறார். நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு, தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை நித்யா மேனன், தற்போது மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.

அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement