பிரபல சினிமா பின்னணி பாடகிகளில் ஒருவர் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாள மொழிகள் உட்பட ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சினிமா வாழ்க்கை மற்றும் இப்போதைய பாடல்கள் குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி மனம் திறந்து பேசி உள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "ஆரம்பத்தில் கோரஸ் பாடல்கள் பாடித்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. அதாவது சுவர்ண சுந்தரி படத்தில் பிலுவகுரா என்ற பாடலுக்கு கோரஸ் பாடுவதற்காக தான் சென்றேன்.
அங்கு அவர்கள் என் குரல் சரியாக இல்லை என்று கூறி வெளியேற்றி விட்டார்கள். நான் உடனே அழுதேன். ஆனால் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் நான் பெரிய பாடகியான பிறகு அதே ரெக்கார்டிஸ்ட் எனது பாடலை பதிவு செய்தார்.
மேலும் இப்போது வரும் பாடல்கள் அனைத்துமே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரி அந்தப்பாட்டு இருந்தது. மியூசிக் டைரக்டர் இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இதுபற்றி பாடகர்களுக்கு என்ன தெரியும். சொல்லியபடி அவர்கள் பாடி விடுகிறார்கள். அதே பாடல் என்னிடம் வந்திருந்தால் அந்த கலரே வேறு. நாங்கள் எல்லாம் எவ்வளவோ சின்சியராக பணி செய்தோம். அதனால்தான் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும்கூட நீடித்து நிலைத்திருக்கின்றன. அப்போது ஒரு படம் 100 நாட்கள், 250 நாட்கள் என ஓடின. ஆனால் இப்போது 10 நாட்கள் ஓடினாலே பெருமை என்று சொல்கிறார்கள்'' என பலவற்றையும் அப்பேட்டியில் பகிர்ந்துள்ளார் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி.
Listen News!