விஜய் டிவியில் ஒளிபரப்பான கேபிவை என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் பாலா. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்தார். பல்வேறு இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார்.
அத்தோடு திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க பயன்படுத்தி வருகிறார்.
தற்போது இவர் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து உதவி உள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னைக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், இதுவரை 3 ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன். முதலாவதாக அறந்தாங்கி நமது இல்லத்திற்கு கொடுத்தோம்,
குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைக்காகவும், மூன்றாவதாக சோளக்களை கிராமத்திற்கு கொடுத்தோம். அப்போது மக்கள் ராஜா அவர்கள் சாலையோரத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த மாதம் 17ந் தேதி சோளக்களை கிராம மக்களுக்கு கொடுத்தோம். இந்த மாதம் 15ந் தேதி,சேலம், திருப்பூர்,கோவை,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலையோர மக்களுக்காக இந்த உதவியை செய்து இருக்கிறேன். பலர் இது எப்படி செய்ய முடியும் உன்னால முடியாது என்று சொன்னார்கள். பலர் என் பாராட்டினாலும், சிலர் முடியாது என்றார்கள்.
125நாட்களில் நான்கு ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன் இது என் தகுதிக்கும் சக்திக்கும் மீறிய விஷயம், பலர் உனக்கே வண்டி இல்ல இதுல, நீயே பிரண்டு கார்லதான் போர உனக்கு எதுக்கு இது எல்லாம் என்று கேட்கிறார்கள். பேன்ஸ் கார்ல நான் ரோட்ல போறதுக்கு, ரோட்ல இருக்குற மக்கள் இதுல போவாங்க. இது போல இன்னும் பல ஆம்புலன்ஸ்களை கொடுப்பேன்.
மேலும் நான் ஆம்புலன்ஸ் உதவி செய்வதால், பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர்.ஆனால், மற்றவர்களின் காசில் நான் ஏன் உதவி செய்ய வேண்டும் அதற்கு அவர்களே செய்வார்களே. நான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் தான் உதவிசெய்து வருகிறேன். யார்கிட்டயும் ஒரு ரூபாய் கூட வாங்கல என் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்று பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!