தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஷர்மிலி. இவர் இறுதியாக காவலன் என்னும் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் ஹொஸ்டல் வாடனாக நடித்திருந்தார்.
மேலும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்து காமெடி நடிகையாக கலக்கி இருப்பார். இந்த நிலையில் தனது உடல் எடையை எவ்வாறு குறைத்தார் என்பது குறித்து பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் எனக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததாலும் உடல் எடை அதிகரித்ததாலும் கட்டாரில் இருக்க சென்று விட்டேன்.என்று கூறினார். அப்போது எப்படி உங்களுக்கு உடல் எடை அதிகரித்தது என்று கேட்டபோது நான் அந்த டைம்ல வேர்க் அவுட் பண்ணிட்டு தான் இருந்தேன்.
உணவுப் பழக்கங்கள் மாறி விட்டது வாழ்க்கையில் ரென்ஷன் ஆகிடுச்சு சரியா துாங்க மாட்டேன். இதனால் எனக்கு உடல் எடை 95 கிலோவாக அதிகரித்து விட்டது. என்னாலேயே என்னோட வேலைய செய்ய முடியல. அப்போ தான் யோசிச்சேன் திரும்ப வேர்க்கவுட் செய்து சாப்பாட்டு பழக்கங்களையும் மாற்றி இப்போது 95 கிலோவில் இருந்து 83 கிலோவாக குறைத்து விட்டேன்.
நான் முஸ்லீம் பெண் என்பதால் என்னோட சாப்பாட்டிற்காக ஷுட்டிங் செட்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ஒரு நாள் சாமுண்டி படம் எடுத்திட்டு இருக்கும் போது எங்க வீட்டில இருந்து சாப்பாடு கொண்டு வந்தாங்க. கவுண்டமணி சேர் சாம்பாறு எடுத்து சாப்பிடும் போது அதில் எலும்பு இருந்திச்சு.
இதனால கவுண்டமணி சேர் சாம்பாறுக்குள்ள எலும்பா என்று கேட்க எங்க வீட்ல சாம்பாறு வைச்சா அதில எலும்பு போடுவாங்க என்றேன் . அதே போல பாயாசத்துக்குள்ள கருவேப்பிலையா கேட்க வாசனைக்காக போடுவாங்க என்று கூறினேன். இதனால் என்னை வச்சு நக்கலடிச்சாங்க என்றும் கூறினார்.
பிறசெய்திகள்:
- திடீரென கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குநர் -அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்..!
- ‘நடிப்பு என்பது சலிப்பான விடயம் என்று தவறாக நினைத்திருந்தேன்’- அனுபவத்தைப் பகிர்ந்த செல்வராகவன்
- முதன் முறையாக டேட்டிங் சென்ற சினேகா- பிரசன்னா ஜோடி-வைரலாகும் புகைப்படம்..!
- எனக்கு திருமணமா-முதன் முறையாக உண்மையை கூறிய சாய்பல்லவி..!
- அக்காவுக்கு இணையாக ரசிகர்களைக் கவரும் வகையில் போட்டோஷுட் நடத்திய யாஷிகாவின் தங்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!