• Nov 15 2024

இப்படித்தான் கஷ்டப்படணும்... 2000 ரூபாய் நோட்டால் வந்த வாக்குவாதம்... மன வேதனையில் குமுறும் கோதண்டம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தது. அதாவது கறுப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் தான் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. பெற ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகக் கூடாது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மே மாதம் 23ஆம் தேதி வங்கிகளில் கொடுத்து கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேற ரூபாய் நோட்டுகளாக அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். 


மேலும் அதிகபட்சமாக 26 லட்சம் வரை 2000 நோட்டுகளை மட்டுமே அவர்கள் மாற்ற முடியும். இதற்கு மேல் யாரும் மாற்ற முடியாது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 10 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20,000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும். இதுவும் செப்டம்பர் மட்டுமே தேதி வரை மட்டுமே மாற்ற அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் இந்த நோட்டுகளை ஒரு நபர் 127 நாட்களில் அதிகபட்சமாக 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும்" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகர் கோதண்டம் அவர்கள் மின்சார வாரியத்தில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்திருக்கிறார். அங்கிருந்த ஊழியர்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கோதண்டம் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். 


இதனையடுத்து கோதண்டம் வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதில் பல கருத்துக்களை குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது "நான் மின்சார வாரியத்தில் 2000 ரூபாய் நோட்டு கொடுத்தேன். அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். வங்கியில் தான் மாத்தணும் என்று சொல்கிறார்கள். இதுதான் இப்ப நடக்கிறது. ஜனநாயக நாட்டில் அரசு அலுவலகத்திலேயே 2000 ரூபாய் நோட்டு வாங்க மறுத்து விட்டார்கள். இது எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது. 

இதனால் நான் அங்கு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். நான் சிறிது நேரத்தில் அங்கிருந்த அலுவலர் ஒருவர் உயர் அதிகாரியிடம் செல்போனில் பேசுகிறார். அதற்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டை வாங்கிக் கொள்கிறார்கள். நான் வாக்குவாதம் செய்த பிறகு தான் ஒரு நோட்டை மாற்றி இருக்கிறார்கள். இந்திய நாட்டிலுள்ள அரசு அலுவலகத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றக்கூடாது என கூறுகிறார்கள்.

சாதாரண பாமர மக்கள் கையில் இருப்பது 1,2 நோட்டு தான். எங்களுக்கு கூலியாக கொடுப்பதும் இதை மட்டும்தான். வங்கியில் மாற்றிக்கொள் என்று சொல்கிறார்கள். இதற்காகத்தான் நான் வங்கிக்கு என்று நான் தனியார் அலுவலகத்தில் கொடுத்தால் கூட சரி. அவர்களே வாங்கி கொள்கிறார்கள். ஆனால், அரசு அலுவலகத்தில் வாங்க மறுக்கிறார்கள். 

இதுதான் எங்கள் நாட்டின் நிலைமை. என்னை போல் யாராவது 2000 ரூபாய் வைத்திருந்தால் இப்படிதான் கஷ்டப்படணும்" என்று மிகவும் மன வேதனையுடன் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement