விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி தனது திறமையை வெளிக்கொணர்ந்தவர் தான் புகழ்.
இதன்பின் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் விடாது போட்டியிட்டார். இதன்பின் குக் வித் கோமாளி முதலாவது சீசனில் கோமாளியாக களமிறங்கிய புகழ் முதல் இரண்டு சீசன்களில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆம், அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானவும் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், இந்த குக் வித் கோமாளி சீசன் 3யின் பைனல் என்பதை அனைவரும் அறிவோம். படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால், குக் வித் கோமாளி சீசன் 3யில் புகழ் சில நாட்கள் மட்டுமே கலந்துகொண்டார்.
அத்துாடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வேடத்தில் கோமாளிகள் தோன்றுவார்கள். அதுவும் இன்று ஃபைனல் என்பதால் கோமாளிகள் மக்களிடம் மிகவும் பரிச்சையமான நடிகர், நடிகைகள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை போலவே வேடமிட்டுள்ளதை நாம் ப்ரோமோவில் பார்த்தோம்.
எனினும் இதில், கோமாளி புகழ் முத்து படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே வேடமிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகழ் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்யா-வெளியானது தகவல்..!
- தளபதி படத்தில் அது இல்லாம இருக்குமா ? வாரிசு படம் பற்றி சீக்கிரட்டை உடைத்த தமன்
- நான் படம் நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது : தி லெஜெண்ட் சரவணன்
- பிராடு…12 கோடி தமிழர்களை ஏமாத்திருக்கீங்க – பார்த்திபனை மறுபடியும் வம்புக்கிளுத்த ப்ளூ சட்டை மாறன்
- நடிகர் ரஜினிகாந்த்துக்கும் விருது- குவியும் வாழ்த்துக்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!