லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பிரபல நடன இயக்குநர் சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மரியான், கதிர், பிரபல மேடை கலைஞர் மாயா கிருஷ்ணன், வையாபுரி என்று மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் திரைபபடம் தான் லியோ.
அண்மையில் இந்த படத்தில் இருந்து வெளியான "நா ரெடி" பாடல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், இளைஞர்கள் மத்தியிலும், விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்படமானது இந்த வருடம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளிவர உள்ளது.
தற்பொழுது இந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரும், இயக்குநருமான கௌதம் வாசுதேவ் மேனன் தனது கதாபாத்திரம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் தன்னுடைய பேவரைட் நாயகி த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இருப்பதாகவும், இது சற்று பெரிய திரைப்படம் என்றும் கூறிய அவர், தன்னுடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் "ஜே" என்ற எழுத்தில் துவங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் நீங்கள் வில்லனா?, விஜய்யின் நண்பரா? அல்லது வேறு விதமான கதாபாத்திரமா? என்று கேட்டதற்கு "இந்த மூன்றும்" என்று பதில் அளித்து, ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!