தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை நயன்தாரா.இவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெற்று வருகின்றது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கனெக்ட். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை நயன்தாராவிற்கு தரவில்லை.
ஆனால், விரைவில் வெளியாகவிருக்கும் ஜவான் திரைப்படம் கண்டிப்பாக நயன்தாராவிற்கு மாபெரும் வெற்றியைப்பெற்று தரும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
ஜவான் படத்தை தவிர்த்து ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்திலும் நயன்தாரா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர், ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு அவ்வப்போது அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவார்கள்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா ஆடை, அணிகலன்களுடன் திருமண கோலத்தில் எப்படி இருக்கிறாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து சிலர் நயனின் தங்கையா..? என கேட்டு வருகின்றனர்.ஆனால் அவர் நயனின் தங்கை இல்லை என்றும் அது வெறும் போட்டோசூட் தான் என்று கூறப்படுகின்றது.
Listen News!