• Sep 20 2024

இப்படிப்பட்ட அப்பாவிடமே முரண்டு பிடிக்கிறாரே- இதெல்லாம் நல்லதற்கு இல்லை- விஜய்யை திட்டி தீர்க்கும் சமூக வலைதளவாசிகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. குடும்ப சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் வாரிசு படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட கிடையாது என்றும் கூறப்படுகின்றது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் விஜய் சில சர்ச்ரசகளில் சிக்கியும் வருகின்றார். அதாவது விஜய்யின் தந்தையான சந்திரசேகர் அண்மையில் தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். கணவனுடன் கேக் வெட்டும் புகைப்படத்தையும் ஷோபனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் தகப்பனின் பிறந்தநாளுக்கு விஜய் வராததால் சமூக வாசிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். மேலும் சந்திரசேகருக்கு நடைபெற்ற சதாபிஷேகத்திற்கும் விஜய் வரவில்லை. இருப்பினும் என் மகனுக்கு ஜூலை 2ம் தேதி ஹைதராபாத்தில் ஷூட்டிங் இருந்தது. அதனால் தான் அவரால் என் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பேட்டி அளித்தார் எஸ்.ஏ.சி.

தன் பிறந்தநாள் மற்றும் சதாபிஷேகத்திற்கு வராவிட்டாலும் மகனை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். இப்படிப்பட்ட அப்பாவிடமே விஜய் முரண்டு பிடிக்கிறாரே. இதெல்லாம் நல்லதற்கு இல்லை. அவரே அப்பாவை மதிக்காமல் மற்றவர்களை மட்டும் பெற்றோரை கொண்டாடச் சொல்கிறார். இதென்ன நியாயம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

இது விஜய் அண்ணாவுக்கும், அவரின் அப்பாவுக்கும் இடையேயான பிரச்சனை. சதாபிஷேகத்தில் விஜய்ணா இல்லாததை பார்க்க பாவமாகத் தான் இருந்தது. ஆனால் அவர்களின் குடும்ப விஷயம் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. இன்று அடித்துக் கொள்வார்கள், நாளை சேர்ந்துவிடுவார்கள் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement