லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதாக அறிவித்து பின்னர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கழட்டிவிடுவது இது முதன்முறை அல்ல எனும் தகவல்
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன்.எனினும் இதையடுத்து நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு பின் சூர்யா உடன் கூட்டணி அமைத்த விக்கி, தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கினார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியடைந்தது.
இதன் பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அவர் இயக்கி வெளியிட்ட படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல், கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படமும் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62 திரைப்படம்.
அத்தோடு கடந்தாண்டு மே மாதம் அஜித் படத்தை இயக்க கமிட் ஆனார் விக்கி. அதன்பின் 8 மாத இடைவெளிக்கு பின்னர் தான் ஷூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த 8 மாத கேப்பில் அஜித் படத்துக்காக விக்னேஷ் சிவன் தயார் செய்திருந்த ஸ்கிரிப்ட் அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் சுத்தமாக பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளனர். இதனால் செம்ம அப்செட்டில் உள்ளாராம் விக்கி.
லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன் உடன் படம் பண்ணுவதாக அறிவித்து பின்னர் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கழட்டிவிடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பும் வெளியானது.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், 2020-ம் ஆண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அப்படம் கைவிடப்படுவதாக அறிவித்தது லைகா. அதேபோன்ற ஒரு நிலை தான் தற்போது ஏகே 62 படத்துக்கும் வந்துள்ளது. அத்தோடு இப்படத்தை சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க லைகா திட்டமிட்டிருந்த நிலையில், விக்கி சொன்ன கதை அந்த அளவுக்கு திருப்தி அளிக்காததால், தற்போது அவரை கழட்டிவிட்டு, மகிழ் திருமேணியை கமிட் செய்துள்ளனர். இதன்மூலம் விக்னேஷ் சிவனுக்கு ராசியில்லாத தயாரிப்பு நிறுவனமாக லைகா மாறியுள்ளது.
Listen News!