விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து இந்தவாரம் குயின்ஷி தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் யார் வெளியேறுவார் என்பதை அறிவதற்காக கமல் சாரின் எபிசோட்டுக்காக பல ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "அதில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு பொக்ஸை கொடுத்து, இது மக்களைப் பொறுத்தவரை உங்களுடைய பாப்பிலாரிட்டி" எனக் கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து adk சென்று தனலட்சுமியை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக அவங்க பேசுகிற விதம், நடந்து கொள்கின்ற விதம் மக்களும் பார்த்திட்டு இருக்காங்க எனக் கூறுகின்றார். அடுத்ததாக மணிகண்டன் சென்று அமுதவாணனை சிவப்பு நிறத்தில் வைக்கின்றார். அதற்கு காரணமாக மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறிச் செல்கின்றார்.
அத்தோடு குயின்ஷி மற்றும் விக்ரமன் ஆகியோர் அசீமிற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றார்கள். உடனே கமல் அசீமைப் பார்த்து "இது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறீங்களா" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே அசீம் இல்லை எனவும், இது அவங்களோட தனிப்பட்ட கருத்து, இதுதான் உண்மை என்று நான் நினைக்கல" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!