• Sep 21 2024

விக்ரம் படத்தில் உள்ள நெகட்டிவ் இது ஒன்று தான்-கசியும் தகவல் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமலின் விக்ரம் படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்துள்ள இப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடத்தே இருந்து பெற்று வருகின்றது. மாஸ்டர் படத்தில் விட்டதையும் சேர்த்து லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக உள்ளது. கதாப்பாத்திரங்கள் தேர்வு, ஸ்க்ரீன் ப்ளே, டிவிஸ்ட்டுகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜின் ஆதிக்கமே உள்ளது. படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அத்தோடு படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செதுக்கியுள்ளார் லோகேஷ் என சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகின்றது. இந்நிலையில் படத்திலுள்ள மைனஸ் குறித்த கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றது. அதன்படி கைதி படம் பார்க்காதவர்களுக்கு விக்ரம் படத்தின் சில காட்சிகள் கனெக்ட் ஆகாமல் போகலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்திற்கு செல்லுங்கள் என ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறி விட்டதால் அந்த விஷயத்தில் அவரை குறை சொல்ல முடியாது எனவும் கூறப்படுகின்றது.ரகசிய ஏஜென்ட்டாக சந்தான பாரதி, வீட்டில் வேலை செய்யும் பெண் திடீரென சண்டை போடும் காட்சியெல்லாம் தேவையில்லாதது என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

அதேநேரத்தில் படத்தின் கான்செப்ட்டை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.மேலும் விக்ரம் படத்தின் கான்செப்ட்டும் கைதி படத்தின் கான்செப்ட்டும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஆனால் ஸ்க்ரீன்ப்ளே படத்திற்கு பெரிய பலமாக உள்ளதால் இந்த சின்ன சின்ன மைனஸ்கள் கூட பெரிதாக எடுபடவில்லை என கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement