• Nov 10 2024

இது குப்பைக் கதை இதை அப்படியே விட்டிடுங்க- பிரபல தயாரிப்பாளர் காலில் விழுந்து கெஞ்சிய ஆர்ஜே பாலாஜி- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ரேடியா சேனலில் ஆர்ஜேவாக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி.பல படங்களில் இவர் துணை கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் எல்கேஜி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக தனது என்ட்ரியை கொடுத்தார். ந

 நடிகர், ரேடியோ ஜாக்கி, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இவரது அடுத்தடுத்த படங்கள், அரசியல் மிக்சிங்கில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. 


எதிர்நீச்சல், தீயா வேலை செய்யனும் குமாரு, வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி போன்ற படங்களில் இவர் துணை கேரக்டர்களில் நடித்துள்ளார்.இவருடைய பேச்சுக்களும் சமீபகாலமாக ஓவராக விட்டது. இதனால் இடமெல்லாம் ஓவர் தலைகனத்துடன் பேசிக்கொண்டு மற்றவர்களை கலாய்ப்பது, கிண்டல் செய்வது என்று முழு நேர வேலையாக பார்த்து வருகின்றார்.

இவர் தற்பொழுது இயக்குநர் கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் எடுக்கும் பொழுதே ஆர்ஜே பாலாஜிக்கும், இயக்குனருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்திருக்கிறது.அப்பொழுது இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்தது ஐசரி கணேஷ் தான். 


அதன் பின் ஒரு வழியாக முதல் பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை பார்க்கும் பொழுது ரொம்பவே மோசமாக ஒரு குப்பை கதை மாதிரி இருக்கிறதாம். அதனால் இதை ரிலீஸ் செய்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று ஆர்ஜே பாலாஜி தலையில் அடித்து புலம்பி இருக்கிறார்.அத்துடன் இப்படம் வெளிவந்தால் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிடும் என்பதற்காக தயாரிப்பாளரிடம் தயவு செய்து இந்த படத்தை இப்படியே நிறுத்திக் கொள்ளலாம். 

மேலும் இந்த படத்திற்கு என்ன செலவு ஆனதோ அதை ஈடு கட்டும் விதமாக நான் அடுத்த படத்தில் உங்களுக்கு நடித்துக் கொடுக்கிறேன். அதனால் தயவு செய்து இந்த படத்தை இப்படியே விட்டு விடுங்கள் என்று தயாரிப்பாளர் காலில் விழுந்து கெஞ்சி வருகிறார்.இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கடும் குழப்பத்தில் இருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement