• Nov 14 2024

90's ரசிகர்களை ஏமாற்றிய இசையமைப்பாளர்... இது தெரியாம போச்சே...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில பாடல்களுக்கான ட்யூனை வேறு சில பாடல்களில் இருந்து காப்பியடிப்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்று தான். எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத் என யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை. 


அது காப்பியடிக்கப்பட்டதா? அல்லது உத்வேகத்தில் இசையமைப்பாளர் உருவாக்கியதா? என்று பல கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் எந்த பாடல்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவல்கள் இணையத்தில் தெளிவாக கிடைத்து வருகிறது.


அவ்வாறு கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய், ரீமா சென் நடிப்பில் வெளிவந்த “பகவதி” திரைப்படம். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் “கை கை வைக்கிறா” என்றொரு பாடல் 90’ஸ் கிட்ஸ்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பாடலாகும். ஆனால் இந்த பாடல் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான “ஜெயம்” படத்தில் இடம்பெற்ற “ரானு ரானு” என்ற பாடலின் காப்பி என தெரிய வந்திருக்கின்றது.


அதே போல் 2000 ஆம் ஆண்டு பிரபு தேவா, ஜெயா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பெண்ணின் மனதை தொட்டு”. எஸ்.ஏ.ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” என்ற பாடல் அனைவர்க்கும் மிக விருப்பமான மெலோடி பாடல் இது. ஆனால் இந்த பாடல் 1959 ஆம் ஆண்டு வெளியான “கன்ஹையா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற “ருக் ஜாவோ” என்ற பாடலின் காப்பி என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.


அவ்வாறே கடந்த 2003 ஆம் ஆண்டு ஷாம், த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “லேசா லேசா”. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிக்கும்படியாக அமைந்தது. இதில் “ஏதோ ஒன்று ஏதோ ஒன்று” என்ற பாடல் “கிருஸ்துமஸ் கோர்னுகோப்பியா” என்ற பழைய கிருஸ்துவ ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி என கூறப்படுகிறது.


மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “காதல் கொண்டேன்”. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் “காதல் மட்டும் புரிவதில்லை” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் “ஹெட்னிங்கனா” என்ற பேகன் இனத்து ஒரு ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி ஆகும். 


Advertisement

Advertisement