'லால் சலாம்' திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, விஜய் டிவி புகழ் தங்கதுரை உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'லால் சலாம்' திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், அதன் கதை இதுதான் என்பதுபோல் ப்ளூ சட்டை மாறன் ட்விட் பணியுள்ளார்.
அதன்படி, லால் சலாம் - நடிகர்களின் பின்னணி என கேப்சன் போட்ட அவர் கூறுகையில்,
பாலகிருஷ்ணா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய் சிம்மா. அதில் 31 வது நிமிடத்தில் ஒரு காட்சி வருகிறது.
மத்திய அமைச்சர் ஒருவர் வெங்கடாசலபதி கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபடுகிறார். அப்போது தன்னிடம் உள்ள பணமாலையை கடவுளுக்கு அணிவிக்க விரும்புவதாக கூறுகிறார். கர்ப்பகிரகத்தில் இருந்து வெளியே வரும் தலைமை அர்ச்சகர் 'இப்பண மாலையை உண்டியலில் போடுங்கள். கர்ப்பகிரகத்தில் நுழையவோ, கடவுள் சிலையை தொடவோ எங்களைத்தவிர யாருக்கும் அனுமதி இல்லை' என்கிறார். உடனே அவரை கன்னத்தில் அறைகிறார் போலீஸ் அதிகாரி.
பிரச்சனை பெரிதாகி... கோவில் நடை சாத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் கோவிலுக்கு வெளியே குடும்பத்துடன் போராட ஆரம்பிக்கிறார்கள். அந்த போலீஸ் அதிகாரி மன்னிப்பு கேட்டாக வேண்டுமென கோஷமிடுகிறார்கள். அவர் முடியாது எனக்கூற.. அங்கே பாலகிருஷ்ணா வருகிறார்.
'கர்ப்பகிரகத்தில் உள்ள சிலையைத்தொட பிராமணர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. சிறிய வயதில் இருந்தே மந்திரம் கற்கிறார்கள். கடவுளை எப்படி அழைக்க வேண்டுமென அவர்களுக்குத்தான் நன்கு தெரியும்.
அவர்கள்தான் நமக்கு குருவாக இருந்து.. அறிவு விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். மரியாதையாக அவர்களிடம் மன்னிப்பு கேள்' என மிரட்ட... அவரும் மன்னிப்பு கேட்கிறார்.
தங்களுக்காக பேசிய பாலகிருஷ்ணாவை அங்கு கூடியிருக்கும் அனைத்து அர்ச்சகர்களும் வாழ்த்துகிறார்கள்.
இந்தப்படத்தை இயக்கியவர் ரஜினியின் நண்பர் கே.எஸ்.ரவிகுமார். தற்போது லால் சலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Listen News!