• Nov 10 2024

மிகப்பெரிய அடி இது... ஜாமீனில் வெளியில் வந்த டிரைவர் பரபரப்பு பேட்டி.. புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாமிலி.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இடம்பெற்ற நகைத் திருட்டு வழக்கில் ஐஸ்வர்யா வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த சில நாட்களாக ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரது குடும்பமும் இவர்களை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர். 

இதனைத் தொடர்ந்து அனைத்து விதமான பொருட்களும் அவர்களிடமிருந்து திரும்ப பெற்ற காரணத்தினால் நீதிபதி ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.


இந்த விடயத்தினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்பத்தில் எல்லோருமே ரொம்ப அப்செட்டில் உள்ளனராம். அதாவது குற்றவாளிகளை இவ்வளவு ஈசியாக வெளியில் வந்திடுறாங்களே, கஷ்டப்பட்டு நாங்க கண்டு பிடித்திருக்கோம், இத்தனை நாள் திருடி மாட்டிக்காமல் இருந்து வந்தார்கள். நாங்கள் கண்டுபிடிச்சுக் கொடுத்ததும் ஜாமீன் மூலமாக ஈசியாக வெளியில் வந்து விட்டார்களே, கண்டிப்பாக மேன்முறையீட்டில் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்  எனப் புலம்பி வருகின்றனராம். 

இந்நிலையில் வெளியில் வந்த அவர்கள் கோர்ட் வாசலில் வைத்து ஒரு சில ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  அதில் அவர் பேசுகையில் "ஏதோ எங்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களை ஜாமீனில் எடுத்ததால் நாங்க வெளியில் வந்திட்டோம். 


ஐஸ்வர்யா மேடம் எப்படியாவது எங்களை மன்னித்து விட வேண்டும். நாங்க காசுக்கு ஆசைப்பட்டு இப்படிப் பண்ணிட்டோம். வேணும்னு எதையும் பண்ணல. ஆனால் நாங்கள் பண்ணியது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். நாங்க செய்த தப்பு, குற்றம் எல்லாவற்றையும் ஒத்துக்கிட்டோம். இதுக்கு அப்புறமாக திருடமாட்டோம். வாழ்க்கையில் திருந்தி வாழ முயற்சி செய்கின்றோம்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் "எங்களுக்கும் குழந்தை, குட்டிகள் இருக்காங்க. அதை ஐஸ்வர்யா மேடம் பார்த்திருந்து கொஞ்சம் மன்னித்து ஏத்துக்கணும். எங்களை திருப்பி வேலைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாய் இல்லை. அவங்க வாயால மன்னிச்சிட்டேன், இதுக்கு அப்புறமாக ஒழுங்காக இருங்க என்று அவங்க வாயால் ஒரு வார்த்தை ஆறுதலாக சொன்னால் போதும், அவங்க மூஞ்சயில் முழிப்பதற்கான அருகதை எங்களுக்கு இல்லை, வாழ்க்கையில் எங்களுக்கு விழுந்த மிகப்பெரிய ஆதி இது, இனி எந்த தப்பும் பண்ண மாட்டோம்" எனவும் கூறியுள்ளார் வெங்கடேசன்.  

இவ்வாறு திருடியவர்கள் தாங்கள் திருந்தி விட்டதாக கூறி திடீரென மன்னிப்புக் கேட்டுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement