லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்தப் பபடத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது. இருப்பினும் பாடலில் விஜய்யின் லுக்கும், நடனமும் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து பேசியிருக்கிறார் மிஷ்கின். அந்தப் பேட்டியில், "லியோ' படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய்யிடம் அடி தம்பி ஒன்றும் இல்லை என்று கூறினேன்.
அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்துதான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர்தான் விஜய் அந்த சீனில் நடித்தார்" என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன மிஷ்கின் எல்லாத்தையும் இப்படி ஓபனா சொல்றீங்களே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
Listen News!