தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் விக்னேஷ் சிவன்.இவர் நடிகர் அஜித்தை வைத்து ஏகே 52 திரைப்படத்தை இயக்கப்போவதாக அந்த ஆண்டின் ஆரம்பித்தில் அறிவித்திருந்தார். இருப்பினும் தற்பொழுது படத்தின் கதை பிடிக்காததால் அஜித் அந்தப்படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகின்றது.
ஒருமுறை டிவி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சிலர் கலந்து கொண்டார்கள். அதில் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனர்களும் பங்கு பெற்றனர். அப்போது எல்லா இயக்குனர்களிடமும் ஒரு படத்தின் வெற்றிக்கு எது தேவை என்ற பொதுவான கேள்வி வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் என்ன பொறுத்த வரையில் படத்தின் வெற்றிக்கு கதை மற்றும் திரைக்கதை தான் முக்கியம். இதுதான் ஒரு படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளது என லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய பதில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.
அதாவது படத்திற்கு கதையைக் காட்டிலும் ஹீரோ தான் முக்கியம். பெரிய ஹீரோக்களின் படத்தை எடுத்தால் திரைக்கதை எல்லாம் தேவையே இல்லை. அவர்களது ரசிகர்களே படத்தை ஓட்டி வெற்றி அடையச் செய்து விடுவார்கள். அதுமட்டுமின்றி பெரிய ஹீரோக்கள் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று மோசமான பதிலை விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
இந்த விஷயம் அஜித்துக்கு தெரிந்து தான் ஏகே 62 படத்திற்கு இவர் சரி வரமாட்டார் என்று யோசித்து படத்திலிருந்து தூக்கி உள்ளாரோ என பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி திரைக்கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். அதற்கு சமீபத்தில் வெளியான லவ் டுடே படமே உதாரணம் என்றும் கூறி வருகின்றனர்.
Listen News!