ஏப்ரல் 1ந் தேதி கீழடியில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா, அவர்களின் குழந்தைகள், சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தோடு பார்வையிட்டனர்.அருங்காட்சியகத்திற்குள் சூர்யாவின் குடும்பத்தினர் இருந்ததால், பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சூர்யாவை பொதுமக்கள் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சூர்யா விதிமுறையை மீறிவிட்டதாக கூறி மதுரை பாஜகவினர் சூர்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்துள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், கீழடி அருங்காட்சியகத்திற்குள் செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேஷன் உடன் இருந்ததால் யாருமே கட்டணமே எடுக்கவில்லை. அந்த பகுதியை சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், அப்பகுதிக்கு வந்த மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்தார்கள்.
ஆனால், சூர்யா தன்னுடைய அவப்பெயரை மாற்றிக்கொள்வதற்காகத்தான் கீழடிக்கு அவர் வந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடும்பத்தோடு குடியேறிவிட்டார். இப்போது மும்பையில் தான் தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனால் ரசிகர்களும், இயக்குநர்களும் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுந்த அவப்பெயரை அழிப்பதற்காகத்தான் அப்பா, அம்மாவை கீழடிக்கு அழைத்து வந்துள்ளார்.
யாருக்குமே தெரியாமல் ரகசியமாக கீழடிக்கு சூர்யா வந்தது எம்பி வெங்கடேஷனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது. அது மட்டுமில்லாமல் அங்கு அத்தனை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் நீங்கள் எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன் என பயில்வான் ரங்கநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
Listen News!