தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் சிவாஜி தன்னுடைய 200வது படத்திற்கு முன்பாக 1978ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தை இயக்குநர் யோகானந்த் இயக்க வியட்நாம் வீடு சுந்திரம் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் இருக்கும் ரஜினி காந்திற்கு முள்ளும் மலரும், பைரவி போன்ற கணிசமான வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதுவும் இப்படத்தின் கதையில் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பெருமைக்குரிய விஷயம் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் “ஜஸ்டிஸ் கோபிநாத்” படத்தில் நேர்மையான நீதிபதியாக இருக்கும் சிவாஜி தன்னுடைய தண்டனையால் குற்றம் செய்யாத நபர் முருகன் சிறைக்கு செல்வார். முருகன் சிறைக்கு சென்ற அதிர்ச்சியினால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்வார். இதனால் முருகனின் மகன் ரஜினியை தன்னுடைய பிள்ளை போல சிவாஜி வளர்த்து வருவார்,
மேலும் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிக்கு சண்டை பயிற்சியும், ஜூடோ பயிற்சியும் கற்றுக்கொடுத்து “ஜஸ்டிஸ் கோபிநாத்” படமானது துவங்குகிறது.
இந்நிலையில் பெரியவனாக வளரும் ரவி சாதி கடந்து உமா என்ற பெண்ணை காதலிக்கிறார். இந்த நேரம் பார்த்து ரவியின் தந்தை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வெளியில் வந்த பின்னர் தன்னுடைய மனைவி இறந்த விஷியத்தை அறிந்து மனமுடைந்து போன முருகன் தன்னுடைய மகன் ரவியை தேடுகிறார். இப்படிபட்ட நிலையில் உமாவின் தந்தை தன்னுடைய மகளை ரவிக்கு திருமனம் செய்து கொடுப்பதை மறுக்க ரஜினிக்கும் தன்னுடைய தந்தை முருகன் என்று தெரிய வருகிறது.
அதே போல ரஜினி காதலிக்கும் பெண் தன்னுடைய அப்பாவை சிறைக்கு தள்ளியவர் என தெரிய வருகிறது.இப்படி கேட்பதற்கு மிகவும் சுவாரசியமான கதையாக இருந்தாலும் படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு மற்ற படங்களை போல கம்பீரமாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால்,அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெறும் 6 நாட்களில் ரஜினி நடித்த “ப்ரியா” படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேலே ஓடி வெள்ளிவிழாவினை கொண்டாடி இருந்தது.
அது போல இதற்கடுத்து வந்த சிவாஜியின் 200வது படமான “திரிசூலம்” பெரிய அளவில் ஹிட் அடித்து பெரிய வசூல் செய்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான ரஜினியும் சிவாஜியும் முதன் முறையாக நடித்த “ஜஸ்டிஸ் கோபிநாத்” படம் இன்று தன்னுடைய 44வது வருடத்தை பூர்த்தி செய்திருக்கிறது.
Listen News!