• Sep 20 2024

சூர்யாவுடன் இணையப்போகும் பாலிவுட் நடிகை-தமிழ் திரையுலகிற்கு இதுவே முதல் தடவையாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில்  மூலம் கதாநயாகனாக அறிமுகமானவர் தான் தான் நடிகர் சூர்யா.

இவர்  நேருக்கு நேர்,  கஜினி,  காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், சிங்கம் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் சூர்யா.ஆனாலும் பல படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு ஆரம்பத்தில் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படம் தான் இவரின்  வெற்றிக்கு அடியெடுத்து கொடுத்தது.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான  ஜெய்பீம், சூரரைப் போற்று,  எதற்கும் துணிந்தவன் என்ற படங்களும் ஹிட் ஆனது.தற்போது வாடிவாசல், வணங்கான், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் நடிகர் சூர்யா இயக்குநர் சிவாவுடன் கூட்டணி அமைக்க இருக்கும் படம் குறித்து நிறைய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் நாயகியாக பாலிவுட்டின் டாப் நாயகி திஷா படானி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


அப்படி இந்த படத்தில் அவர் நடித்தால் இதுவே தமிழில் அவர் நடிக்கும் முதல் படமாக அமையும்.


Advertisement

Advertisement