• Sep 21 2024

முதல் முறையாக பாலிவுட் நடிகருடன் இணைந்து சமந்தா வெளியிட்ட புகைப்படம்-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா ,சகுந்தலம், குஷி ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகின்றார். தனது காதல் கணவரை விவாகரத்துக்கு செய்ததன் பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா புதிய விளம்பரத்தில் நடித்து வருகிறார். அதுவும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருடன் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த விளம்பர படப்பிடிப்பில் இருந்து போலீஸ் உடையுடன் ரன்வீர் சிங் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் ரன்வீர் சிங் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதும் இந்த விளம்பர படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்டம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement