• Sep 20 2024

பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமான தாமரையின் சொந்த வீடு இது தானா..வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தாமரைச் செல்வி. நாடகக் கலைஞரான இவர் தமிழகத்தில் நாடகக்கலை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சமானவர். நாடகத்தில் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது உள்ளிட்ட பன்முக திறமைகளை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வந்தார்.

அத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை தனது அம்மா வீட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் தான் நாடகம் நடத்தி அதில் வரும் பணத்தை கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்து காப்பாற்றி வருகிறேன் என்று கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

இந்த நேரத்தில் தான் தாமரையின் அம்மா வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இதோ பாருங்கள் அவரது வீடு,



Advertisement

Advertisement