• Sep 21 2024

விக்ரம் படத்திற்கு முதன்முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இது தானாம்-கமலே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்நிலையில் படத்தை நேற்று ரசிகர்களுடன் திரையரங்கில் கண்ட கமல் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு ஹிட் லிஸ்ட் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டதாம். மேலும் போதை மருந்து கடத்தல் பற்றின கதையாகவும் கமல் அப்போது விக்ரம் படத்திற்கு அமைத்திருந்தாராம்.

ஆனால் அப்போதைய கால கட்டத்திற்கு அந்த கதை சரியாக இருக்காதென்பதால், அதனை தவிர்த்து விட்டாராம். அந்த கதையை தான் தற்போது லோகேஷ் கனகராஜ் தற்போதையா விக்ரம் படத்திற்கு ஏற்றார் போல் மாற்றியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement