தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் மறைந்த மூத்த நடிகர் எம்.ஜி.ஆர்.,வரை அந்த காலத்து ரசிகர்கள் மாத்திரம் அல்லாது தற்கால ரசிகர்களும் கொண்டாடி வருவது தெரிந்த விடயமே.
நடிகராக மட்டுமல்லாது மக்கள் தொண்டு ஆற்றுவதற்காக அரசியலில் களம் இறங்கிய இவ மக்கள் தம் தலைவர் என்றும் அவரது நினைவு தினம் வரும் போதெல்லாம் கடவுளாக மதித்து மரியாதை செலுத்தி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இவரைப் போல ஒரு தலைவன் வர மாட்டாரா என இப்போதும் ஏங்குகிறார்கள். இவரைப் பின்பற்றியே நடிகர் கமல்ஹாசன் அரசியிலில் குதித்துள்ளார் என்பதை அண்மையில் கமல் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர் கடைசியாக பார்த்த படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரத்தில் பாரதிராஜா சத்யராஜ்-அமலாவை வைத்து வேதம் புதிது என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சென்சார் குழு படத்திற்கு எந்த கட்டும் சொல்லவில்லை, ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கட்டளை போட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் உடனே பாரதிராஜாவை அழைத்து அப்படத்தை நான் பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
பின் ஏ.வி.எம் தியேட்டரில் படக்குழுவுடன் படத்தினை பார்த்தாராம் எம்.ஜி.ஆர். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக உடனே ரிலீஸ் தேதியை அறிவித்து விடு, படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என பாரதிராஜாவிடம் கூறி சென்றாராம். அந்த வகையில் எம்.ஜி.ஆர் அவர்கள் கடைசியாக பார்த்த படம் இதுதான் என்று தகவல் வைரலாகி வருகின்றது.
Listen News!