லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் இப்படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் இப்படத்தின் உடைய அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாது இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதவாது பொதுவாக விஜய் தன் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி வருவது வழமை.
இந்நிலையில் சமீபகாலமாக விஜய்யின் உடைய அரசியல் பயணம் குறித்துத்தான் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எந்த மாதிரியான குட்டி ஸ்டோரியை ரசிகர்களுக்கு கூறுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் விஜய் இதுவரை வெளியான படங்களினுடைய இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லும்போது அந்த படத்தின் கதைக்களத்தை மையமாக வைத்து அதை சார்ந்த கதையை அரசியல் கலந்து கூறுவார்.
அதேபோன்றுதான் தற்போது லியோ படத்தின் கதைக்களத்தை மையமாக வைத்து இம்முறை தன் குட்டி ஸ்டோரியை விஜய் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இதில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் வழமையை விட சற்றுத் தூக்கலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!