விஜய் டிவியில் தோன்றி தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர். வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவரின் காமெடியை அடிச்சுக்க சின்னத்திரையில் ஆளே இல்லை எனக் கூறலாம்.
சின்னத்திரையில் மட்டுமன்றி சமீபகாலமாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இது தவிர சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்தவகையில் ஆதரவற்ற பல பல குழந்தைகளுக்கு உதவுவது மட்டுமல்லாது சமீபத்தில் 3ஆம்புலன்ஸையும் அன்பளிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பாலா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பலரது மனதையும் உருகச் செய்துள்ளது. அதில் அவர் தனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும், அந்த போனில் பேசிய ஒரு தாய் தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அதை வீடியோவாக பாலாவின் சமூக வலைதள பக்கத்தில் பகிருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் இதன் மூலமாக தனது மகளின் மருத்துவ உதவிக்கு ஏதாவது பணம் கிடைக்கும் என்பதனால் தான்.
ஆனால் உடல் நிலை சரியில்லாத அந்தப் பெண்ணினுடைய வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர மனமில்லாத பாலா அவரின் மருத்துவ செலவிற்காக ஒரு லட்சம் தொகையை கொடுத்ததுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தானே ஏற்று கொள்வதாக பாலா கூறியுள்ளார்.
பாலாவின் இந்த மனிதாபிமானத்தை பாராட்டிய பலரும் கடவுளின் உருவத்தை உங்களில் பார்ப்பதாக கூறி வருகின்றனர்.
Listen News!