• Sep 20 2024

அம்மா சொல்லுற அட்வைஸ்ட் இது மட்டும் தான், எப்போ வீட்டை விட்டு போவாங்க என்று இருக்கும்- மனம் திறந் பேசிய ரம்யா கிருஷ்ணனின் மகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகர் ரம்யா கிருஷ்ணன். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். படையப்பா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

மேலும் இப்படம் வெளியாகி வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.இந்த நிலையில் அண்மையில் ரம்யா கிருஷ்ணனும் அவரது மகன் ரித்விக்கும் இணைந்து அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளனர்.அதில் மகன் ரித்விக் எடுத்தவுடனே உங்க அம்மாவை எவ்வளவு பிடிக்கும் என கேட்டதற்கு, ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்ல டார்ச்சர் பண்ணுவாங்க என சொல்லி ஆரம்பமே அமர்களப்படுத்திவிட்டார். 


இது பண்ணாத. அது பண்ணாதன்னு ஒரே அட்வைஸ் என மகன் சொல்ல, எது பண்ணாதன்னு சொன்னேன் என சிரித்து கொண்டே கேட்டார் ரம்யா கிருஷ்ணன்.அதற்கு அவர் ஜன்ங் புட் எல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்வாங்க என்று சொல்கின்றார்.அதுக்கு ரம்யா கிருஷ்ணன்இது எப்படியோ எல்லார் வீட்லயும் சொல்ற ஒன்னு தானே என்றார்.

மேலும் தன்னுடைய அம்மாவிடம் பிடிக்காத விஷயம் பற்றி சொல்லும் போது, 'பாகுபலி' படத்துல வர்ற மாதிரி கண்ணாலயே மிரட்டுவாங்க என்றார். அதனை தொடர்ந்து அம்மா பண்ணதுலயே உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன என பாலா கேட்கும் போது, எல்லாருக்கு பிடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தையே அவர் மகனும் கூறினார்.

மேலும் அம்மா அவுட்டோர் ஷுட்டிங் போறப்ப எவ்வளவு மிஸ் பண்ணுவீங்க என பாலா கேட்ட போது, முன்னாடியெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஆனா இப்பலாம் நிம்மதியாய் இருக்கும் என்று சொல்ல ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து விட்டார்.அரங்கில் இருந்தவர்களும் ஒரே கைத்தட்டல். உடனே அவர், ஜோக் தான். ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றார்.

உடனே ரம்யா கிருஷ்ணன் ஜோக் எல்லாம் இல்லை. உண்மைதான். முன்னாடியெல்லாம் அவுட்டோர் ஷுட்டிங் போறப்ப எப்ப வருவன்னு கேட்பான். இப்போலாம் எப்ப அவுட்டோர் ஷுட்டிங். எப்போ போறான்னு கேட்குறான் என தன் பங்குக்கு மகனை கலாய்த்து அவரும் அரங்கை கலகலப்பாக்கிவிட்டார். அதன்பின்னர் அம்மாவிடம் பொய் சொல்வது பற்றி பேசும் போது, நான் பொய் சொல்லணும் நினைக்கும் போதே கண்டுபிடிச்சுருவாங்க என்றார்.


மேலும் இப்போலாம் அம்மா தான் எனக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எல்லாம் அனுப்புறாங்க. ஓபன் பண்ண மாட்டேன். ஒரே பூமர் ரீல்ஸ் அனுப்புவாங்க என்று வேறு சொல்லி தனது அம்மா ரம்யா கிருஷ்ணனை கலாய்த்து தள்ளிவிட்டார். அதனை தொடர்ந்து அம்மாக்கிட்ட கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ் பற்றி சொல்லும் போது, எப்பவும் நேர்மையாய் இருக்கணும் சொல்வாங்க என்று சொல்லியுள்ளார்.இந்தப் பேட்டி வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement