நடிகர் விஜய் தேவர்கொண்டா தற்பொழுது லைகர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அத்தோடு படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் அண்மையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அடுத்த கட்டமாக மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரயில் பயணத்தில் அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து விஜய் தேவர்கொண்டா சிறிது நேரம் பயணம் செய்தார்.இருவரும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து காட்சியளித்தனர்.
அந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே அணிந்த டாப் ஆடையின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மஞ்சள் நிற டாப்பின் விலை சுமார் 57,000 ரூபாய் என தெரிகிறது. இந்த டாப் Stella McCartney என்ற பிராண்ட் முலம் உருவாக்கப்பட்டதாகும். இந்த டாப் Scuba Zip Corset என்ற ரகத்தை சார்ந்தது. 40,000 முதல் 80,000 வரை இந்த உடையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
- முதல் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா- பெயர் என்ன தெரியுமா?
- பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்
- மாரடைப்பால் திடீரென மரணமடைந்த பிரபல நடிகர்- தொடர் சோகத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!