• Sep 21 2024

லோக்கல் ரயிலில் பயணம் செய்த லைகர் பட நடிகை அணிந்திருந்த ஆடையின் விலை இவ்வளவா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தேவர்கொண்டா தற்பொழுது லைகர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அத்தோடு படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் அண்மையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அடுத்த கட்டமாக மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்தனர்.

இது தொடர்பான புகைப்படங்களை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரயில் பயணத்தில் அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து விஜய் தேவர்கொண்டா சிறிது நேரம் பயணம் செய்தார்.இருவரும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து காட்சியளித்தனர்.

அந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே அணிந்த டாப் ஆடையின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மஞ்சள் நிற டாப்பின் விலை சுமார் 57,000 ரூபாய் என தெரிகிறது. இந்த டாப் Stella McCartney என்ற பிராண்ட் முலம் உருவாக்கப்பட்டதாகும். இந்த டாப் Scuba Zip Corset என்ற ரகத்தை சார்ந்தது. 40,000 முதல் 80,000 வரை இந்த உடையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement