நேற்றைய தினம் மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் நேரடியாக சென்று தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் அவர்களும் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது சுஹாசினி சரத்பாபுவின் இறப்பிற்கான காரணம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது சுமார் 92 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் சரத்பாபு என அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் சரத்பாபுவின் உறவினர்கள் பலரும் பெங்களூருவில் இருந்து வந்த நிலையில், சாதாரண காய்ச்சல் என்று தான் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சரத்பாபு அனுமதிக்கப்பட்டாரம். அதன் பின்னர் நோய்த் தீவிரம் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மல்டிபிள் மைலோமா நோய் காரணமாகத் தான் உயிரிழந்தார்" என சுஹாசினி கூறியுள்ளார்.
அதாவது எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் ஒருவகைப் புற்றுநோய் தான் மல்டிபிள் மைலோமா ஆகும். எனவே மைலோமா என்பது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும், இந்த நோயானது எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது.
இப்படியொரு பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் என்றும் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து சுஹாசினி மணிரத்னமும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் மருத்துவர்கள் இதனை தெரிவித்ததாகவும் நடிகை சுஹாசினி இன்றைய தினம் செய்தியாளர்களிடம் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
Listen News!