• Sep 20 2024

குக் வித் கோமாளி புகழ் பவித்ராவிற்கு ஏற்பட்ட சோக நிலை... இதுதான் காரணமா..? அவரே வெளியிட்ட பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய மாடல் அழகியான பவித்ரா லட்சுமி கடந்த 2015-இல் 'Miss Madras' பட்டத்தையும்,  2017-இல் 'Queen of Madras' விருதையும் வென்று சாதனை படைத்த ஒருவர். அத்தோடு நடிகர் அஸ்வின் குமாருடன் இவர் இணைந்து நடித்த 'பைலட்' என்னும் குறும்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இந்த குறும்படத்தில் வரும் 'ஹலோ சீனியர்' போன்ற சில வசனங்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



எனினும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது என்னவோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி தான். இந்நிகழ்வானது தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துவிட்டது. இதில் 2ஆவது சீசனை மக்களால் மறக்கவே முடியாது. ஏனெனில் அதில் அஷ்வின், ஷிவாங்கி, புகழ், பாலா, பாபா பாஸ்கர் போன்றவர்கள் சேர்ந்து செய்த அட்டகாசங்களை சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு இந்த நிகழ்வு சிறப்பாக இருந்தது.


இந்நிகழ்ச்சியின் மூலமே பவித்ராக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. பட வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இவர் சில புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் கர்லி ஹேர்ஸ்டைலில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு பதிவேற்றி வரும் புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்து வருகிறது.



இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் இவர் உடல் எடை மிகவும் குறைத்து காணப்பட ரசிகர்கள் அவரை என்ன செய்தீர்கள் என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பவித்ரா ஸ்டோரி ஒன்றினை வைத்துள்ளார். 



அதில் "யாரும் என்னை போல் செய்ய வேண்டாம். நான் உடல் எடை குறைய எதுவும் செய்யவில்லை, சரியான தூக்கம், சாப்பாடு என எதுவும் இல்லாமல் வேலையிலேயே இருந்ததால் இப்படி ஆனேன்" எனப் பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். இப்பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement