தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குநரின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் ஷங்கரின் மகள் அதிதி. இவர் முதல் முதலாக கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியாகியிருந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வெற்றி பெற்று வருவதோடு இதில் அதிதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. பாட்டு டான்ஸ் என இப்படத்தில் சூப்பராக ஸ்கோர் செய்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகின்றார்.
இந்த நிலையில் இவர் இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில், இப்படத்தில் அதிதி ஷங்கரை நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்ய காரணம் அதிதியின் தந்தை இயக்குநர் ஷங்கர் எனும் பிராண்ட் தானாம்.
இதனால், தான் தனது மாவீரன் படத்தில் அதிதி ஷங்கரை கதாநாயகியாக நடிக்க வைக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Listen News!