விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி அரசியல் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் எனக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிரமாக செய்து வருகிறார்.
மேலும் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு ஆறு மாதம் பிரேக் எடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக தான் இந்தத் திடீர் முடிவு எனவும் தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல விஜய் ஒரு சில வேலைகளையும் செய்து வருகின்றார்.
அந்தவகையில் பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு உணவு வழங்கினார். அதேபோல் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பேச இருக்கின்றார்.
இவ்வாறாக அரசியல் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வரும் விஜய் தனது எழுபதாவது படத்தோடு நடிப்பதை நிறுத்திக்கொண்டு முழுமையாக அரசியலில் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. எது எவ்வாறாயினும் அரசியல் வருகை மகிழ்ச்சியளித்தாலும் விஜய் நடிப்பதை நிறுத்த போவதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.
Listen News!