விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் வனிதா விஜயகுமார்.இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாயப்பைப் பெற்று நடித்தும் வருகின்றார்.
இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தனது குடும்பம் குறித்த விடயங்களைப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது எங்க வீட்டில அப்பாவுக்கும் எனக்கும் முதலில் சண்டை நடந்து கோர்ட் வரை போய் வந்தாச்சு. இருந்தாலும் அம்மா ஒரு நாள் சொன்னாங்க அப்பா கிட்ட பேசு என்று நானும் நேர்ல போய் காலில் விழுந்து பேசினேன். அவங்களும் மன்னிச்சிட்டாங்க.அப்பிறம் அவங்க கூட தான் ஒன்றாக இருந்தேன்.
அம்மாவை ஹொஸ்பிட்டல்ல வைச்திருக்கும் போதும் நான் தான் அம்மா கூட நின்றேன்.ஆனால் அப்பா அம்மா இறந்தவுடன் பொம்மை ஆகிட்டாங்க.மற்றவங்க சொல்லுறதை கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவோட இறுதி சடங்கில கூட நான் தனியாத் தான் நின்றேன். மூத்த பொண்ணு நான் என்பதால் அம்மாட சாகியங்களை நான் தான் பண்ணனும் என்று சரத்குமாரும் ராதாரவி அங்கிளும் சொன்னாங்க அதனால தான் என்னை அதை பண்ண விட்டாங்க. அதுக்கு பிறகு நான் தனிய வந்திட்டேன்.
ஆனால் நான் அப்பா கிட்ட இப்போ சில வருஷத்திற்கு முன்னாடி பேசினேன். அப்ப கூட அவர் நல்லாத் தான் பேசினாரு.அவருக்கு என்மேல பாசம் இல்லாமல் எல்லாம் இல்ல யாரோ அவரை என்கிட்ட பேசாத அளவுக்கு பண்ணிட்டு இருக்காங்க. அதே மாதிரி தான் அருண் விஜய் அண்ணாவையும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
அப்போ போய் பேசினேன். அவரும் என்கிட்ட நோர்மலாக பேசினாரு பின்னர் வீட் டை போகணும் என்று ஓடிட்டாரு. அவர் வீட்டுக்கு போய் யாராவது கேட்டால் பதில் சொல்லணும் என்று பயப்படுகின்றாரு. அதான் என்னோட உறவுகளுக்கு என்கிட்ட பேச விருப்பம் ஆனால் வெளில இருந்து வந்தவங்க தான் அவங்கள பேச விடாமல் தடுக்கிறாங்க என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் எனக்கு சொத்து எதுவும் வேணாம். ஆனால் என்னோட உரிமையை என்கிட்ட இருந்த பறிச்சிட்டாங்க.அதை என் பிள்ளைகளுக்காவது கொடுக்கணும் அது தான் என்னோட ஆசை.ஏமாத்த மாட்டாங்க என்று நினைக்கிறேன்.
என்னோட மூத்த மகள் ஜோவிதா சொல்லுவா அண்ணா வந்தால் நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஆனால் நான் அதை நீ சொல்லாத அவ என் பிள்ளை அவன் கிட்ட பேசுவேன் என்று தான் சொல்லுவேன். அதே மாதிரி தான் எவ்வளவு காலம் இப்படியே இருக்கப்போகின்றோம். எனக்கு கண்டிப்பா நம்பிக்கை இருக்கு ஒரு நாள் என்கிட்ட வந்து பேசுவாங்கனு எல்லாமே மாறும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்ததைக் காணலாம்.
Listen News!