• Sep 20 2024

முதல் நாள் வசூலில் மண்ணைக் கவ்வப்போகும் 'லியோ'... காரணம் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக அமைந்துள்ளது.


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


பல கோடி பட்ஜெட்டில் உருவான இப்படமானது இதுவரை ரூ. 434 கோடி வரை பிஸ்னஸ் செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனையடுத்து லியோ கண்டிப்பாக ரூ. 1000 கோடி வரை வசூல் செய்யும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இவ்வாறான பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு சில நெகடிவ் விமர்சனங்களும் வைரலாகி வருகின்றன. அதாவது லியோ படத்தின் முதல் நாள் தமிழக வசூல் எப்படியும் சரிந்து விடும் எனக் கூறப்படுகின்றது. 


அதாவது லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் என அரசுதரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து மீண்டும் அரசிடம் தயாளரிப்பாளர் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரியுள்ளார். அவ்வாறு அதிகாலை காட்சி கிடைக்காமல் போனால் முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 40% சதவீதம் லியோ திரைப்படம் இழந்து விடும் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement