தமிழ் சினிமா உலகில் தன்னுடைய இளம் வயதில் மிக பிரபமாலான வில்லனாகவும் வயதான பின்னர் இப்படி பட்ட அப்பா நமக்கு கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் ஏங்கும் வண்ணம் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ரகுவரன்.
இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா 1982 மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்அதன் பிறகு இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து மற்றும் அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.
அத்தோடு , இவர் தமிழில் உள்ள ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து முத்து, பாட்ஷா, அருணாச்சலம் போன்றா திரைப்படங்களில் கனக்கட்சிதமான வில்லனாக நடித்து கதாநாயகனுக்கு இணையாக ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார். மேலும் குணச்சித்திர நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து தனக்கு நிகர் அவர் தான் என்று நிரூபித்து காட்டியவர்.
இவ்வாறுஇருக்கையில் வில்லனாக நடித்து வந்த ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்
அத்தோடு கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் தன்னுடைய 60வது வயதில் ரகுவரன் காலமானார். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் ஈடுகட்ட முடியாத அளவிற்கு பேரிழப்பாக இருந்தது. இந்நிலையில் நடிகர் ரகுவரனின் மனைவியான ரோகினி சமீபத்தில் பேட்டி ஓன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த ரகுவரன் ஏன் கமலஹாசன் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று ரோஹினியுடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரகுவரனின் மனைவி ரோகினி கமலஹாசன் நடித்திருந்த “நாயகன்” திரைப்படத்தில் நடிகர் நாசர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ரகுவரன் தான் நடிக்க வேண்டியதாம். ஆனால் அப்போது ரகுவரன் வேறொரு திரைப்படத்தில் நடிப்பதற்காக நீளமான முடி வைத்திருந்ததினால் அந்த படத்தில் நாசர் நடித்தாராம். ஆனால் கமல் மற்றும் ரகுவரன் இருவருமே மிகப்பெரிய நடிகர்கள் இதனால் கமலுடன் ரகுவரன் நடித்தால் காமலுடைய நடிப்புக்கு மதிப்பு குறைந்து விடும் என்று தான் ரகுவரன் நடிக்க கமல் சம்மதிக்க வில்லை என்று அப்போது பல ஊடகங்கள் கூறின.
ஆனால் அந்த மாதிரியான விஷியங்கள் நடைபெற வில்லை. அத்தோடு கமலஹாசனும் கூட நடிகர் ரகுவரன் நடிக்காதது தனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறியிருந்தார் என்று நடிகை ரோகினி அந்த பேட்டியில் கூறியிருந்தார். நாயகன் திரைப்படம் கமலஹாசன் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் ஓன்று, 1 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பல விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!