• Sep 20 2024

தனுஷுடன் இணைந்து நடிக்க மறுப்புத் தெரிவித்த பிரபலம்... காரணம் இது தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுக்கும் ஒரு இயக்குநராக இருப்பவர் வெற்றி மாறன். அந்தவகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானார். 


இப்படத்தின் உடைய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரின் கூட்டணி களமிறங்கியது. அதாவது 2011-ஆம் ஆண்டு சேவல் சண்டையை மையமாக வைத்து 'ஆடுகளம்' என்னும் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இதில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி இணைந்து நடித்திருந்தார். 


மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். அத்தோடு இந்தப் படமானது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என ஐந்து விருதுகளை வென்றெடுத்திருக்கின்றது.

இவ்வாறாக ஆடுகளம் படத்தில் பல துணை கதாபாத்திரங்கள் இருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரம் என்றால் அது பேட்டைக்காரன் என்னும் கதாபாத்திரம் தான். இதில் நடிகர் ஜெயபாலன் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார்.


ஆனால் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தானாம். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் இவருக்கு பிடிக்கவில்லையாம். அதன் காரணமாகத் தான் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement