ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்த திரைப்படம் 'சர்க்கஸ்'. இப்படமானது கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளியானது. மேலும் இப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் மோசமான வசூலை பெற்று வருகிறது.
அதாவது சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெறும் ரூ.33 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், ஹாலிவுட் படமான ‘அவதார் 2’ திரைப்படம் இந்தியாவில் வசூலில் கலக்கிக் கொண்டிருப்பது தான். இதனாலே பாலிவுட் படமான சர்க்கஸ் படம் வெறும் பத்தே நாளில் தோல்வியை சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்லாது சர்க்கஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு முதலில் நெகடிவ் விமர்சனங்கள் பலவும் எழுந்ததால், பார்வையாளர்களை அப்படம் ஈர்க்கத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறாக வெளியான 10 நாளில் படத்தின் வசூல் வேகம் கணிசமாக குறைந்துவிட்டது. அந்தவகையில் படத்தின் வார இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை லாபத்தை பொறுத்தவரை, வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படமானது மொத்தமாக ரூ.33 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதால் படத்துக்கு பெரிய அடி என்றே சொல்ல வேண்டும். அத்தோடு ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.30 கோடி மட்டுமே தாண்டியுள்ளதால் படக்குழு பெரும் சோகத்தில் உள்ளது.
எது எவ்வாறாயினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வசூல் மிகவும் மோசமாக இருந்தாலும், அதன் சாட்டிலைட், டிஜிட்டல் வியாபாரம் படத்தின் பட்ஜெட்டை மீட்டு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு தகவலின் படி, அதன் மொத்த உரிமைகளும் ரூ.135 கோடியை சம்பாதிக்கும் என நம்பப்படுகிறது.
Listen News!