தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக ஜொலித்து வருபவர் பிரபாஸ். குறிப்பாக 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களில் நடித்ததை தொடர்ந்து, உலக அளவில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக மாறிய பிரபாஸ் நடிப்பில், அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகின. இருப்பினும் 'சாஹோ' மற்றும் 'ராதே ஷியாம்' ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அடுத்ததாக வெளியாகும் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பினைக் காட்டி வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபாஸ். இந்நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் மிக பிரம்மாண்டமாக, சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'.
இந்த படத்தில் ராமராக நடிக்க மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் பிரபாஸ் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவரோடு இணைந்து இந்த படத்தில், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலிகானும், சீதை கதாபாத்திரத்தில் கிர்தி சனோனும் நடித்துள்ளனர்.
அத்தோடு ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் ஆனது சமீபத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் 'ஆதிபுருஷ்' திரைப்படம், ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது படக்குழு.
மேலும் இந்த அறிக்கையில் "'ஆதிபுருஷ்' திரைப்படம் அல்ல, ஆன்மீக நூலான ராமாயணத்தை தவிழு, எடுக்கப்படும் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாறு. இதனை படமாக திரையில் பார்க்கும் போது, ரசிகர்கள் பரவசமடைய வேண்டும்.
அதற்கான பணிகளை மேற்கொள்ள இன்னும் சில நாட்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. எனவே ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16-ஆம் தேதி 2023 அன்று பிரமாண்டமாக வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் ஆனது பிரபாஸின் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பலரையும் ஏமாற்றமடைய செய்துள்ளது.
Listen News!