தமிழ் சினிமாவின் உச்ச நாயகனான விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. வம்ஷி இயக்கும் இந்தப் படமானது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் நடிக்க, அவர்களுடன் தற்போது குஷ்பூவும் இணைந்துள்ளார்.
ஆரம்பத்தில் வாரிசு படத்தில் குஷ்பூ நடிப்பது குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகத நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்னரே அவரும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளது தெரியவந்தது.
இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ளமை குறித்து குஷ்பூ சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார். அதில் அவர் கூறுகையில் "வாரிசு படத்தில் எனக்கு கேமியோ ரோல் தான், ஆனால் நான் வரும் காட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் மட்டுமே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "விஜய்யுடன் ஏற்கனவே மின்சார கண்ணா படத்தில் நடித்துள்ளேன். அத்தோடு அவருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருப்பதால், வாரிசு படத்தில் நடித்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மற்றுமோர் அனுபவத்தையும் அதில் பகிர்ந்திருக்கின்றார். அதாவது "விஜய் பிரண்ட்ஸ் படத்தின் ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தபோது, நானும் அங்கு வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். நாங்கள் எல்லோருமே ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம். அப்போது விஜய் எப்படி டெடிக்கேஷனாக இருந்தாரோ, அதேபோன்று தான் இப்போதும் அச்சு அசலாக இருக்கிறார்" என கூறியிருக்கின்றார்.
மேலும் "வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால், விஜய் அதை பொருட்படுத்தாமல் ஹை ரிஸ்க் எடுத்து ஒரு சண்டைக் காட்சியில் அமோகமாக நடித்துள்ளார்" என வாரிசு படத்தின் முக்கியமான ரகசியத்தையும் போட்டு உடைத்துள்ளார் குஷ்பூ.
அதுமட்டுமல்லாது வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களுக்காக தனது உடல்நலம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விஜய் நடித்ததாகவும் குஷ்பூ மனம் திறந்து பேசியுள்ளார். இவ்வாறாக வாரிசு படத்தின் சண்டைக் காட்சி குறித்து குஷ்பூ கொடுத்துள்ள அப்டேட், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!