• Nov 19 2024

'வானத்தைப்போல' படத்தை சரத்குமாருக்கு கொடுக்க மறுத்த விக்ரமன்... காரணம் இதுதானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1990-களில் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், அஜித், விஜய் என்று பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் தான் விக்ரமன். இவர் இயக்கத்தில் உருவான படங்களோ ஏராளம். அதில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. 

இந்நிலையில் இவர் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தன்னுடைய இயக்கத்தில் வெளியான 'வானத்தைப்போல' மற்றும் 'சூரியவம்சம்' போன்ற திரைப்படங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.


அதாவது வழக்கமாக ஆக்க்ஷன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் அவர்கள் 'வானத்தைப் போல' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இரண்டுமே சற்று சாந்தமான குணாம்சத்தைக் கொண்ட கதாபாத்திரங்களாக வடிவமைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருக்கும். ஆனால் அதனைக் கூட விஜயகாந்த் முதலில் வேண்டாம் என்று கூறினாராம். இதற்கான காரணம், இது விஜயகாந்த் படமாக இல்லாமல் விக்ரமன் படமாக இருக்க வேண்டும் என்பது தானாம் அவருடைய எண்ணம்.

ஆனால் விஜயகாந்தின் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கிளைமாக்ஸில் ஒரு சண்டைக் காட்சியை வைத்தாராம் இயக்குநர் விக்ரமன்.


இந்நிலையில் "வானத்தைப்போல திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம், அதற்கு முன்னர் நான் இயக்கியிருந்த சூரியவம்சம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது தான்" எனக் கூறியிருக்கின்றார் விக்ரமன்.

அதாவது 'நாட்டாமை' திரைப்படத்தின் உடைய வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நடிகர் சரத்குமாருக்காக விக்ரமனிடம் கதை கேட்டபோது விக்ரமன் முதலில் வானத்தைப்போல கதையைத்தான் கூறியுள்ளார்.

ஆர்.பி. சௌத்ரிக்கும் சரத்குமாருக்கும் அந்தக் கதை மிகவும் பிடித்து போய்விட்டதாம். ஆனால் ஒரு நாள் திடீரென அந்த படம் அவருக்கு வேண்டாம் எனவும், நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தபோது சூரியவம்சம் என்ற கதை ஒன்றினை எழுதியுள்ளேன். அந்தப் படத்தை எடுக்கலாம் என்று கூறினாராம் விக்ரமன்.


இவர் இவ்வாறு கூறியமைக்கான காரணம் என்னவென்றால், நாட்டாமை திரைப்படத்தில் ஒரு வீரமான ஆண்மகனாக சரத்குமாரை ரசிகர்கள் அனைவரும் பார்த்துவிட்டார்கள்.

அப்படி இருக்கும்போது இதில் சாந்தமான கதாபாத்திரத்தில் காமராஜர் சட்டை அணிந்து கொண்டு குடுமியும் கடுக்கனும் போட்டுக் கொண்டு அமைதியான குணவியல்பு கொண்டவராக சரத்குமார் வந்தால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதானாம். 

இதனையடுத்து தான் சூரியவம்சம் படத்தை தொடங்கினார்களாம். மேலும் சரத்குமாருக்கு வானத்தை போல படத்தின் கதை சொன்ன போது இரட்டை வேடங்கள் இல்லாமல் அண்ணன் கதாபாத்திரம் மட்டும்தான் கதாநாயகன் நடிப்பது போல இருந்ததாம்.

ஆனால் பின்னர் விஜயகாந்த் ஒப்பந்தமான போதுதான் இரட்டை கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார் எனக் கூறியுள்ளார் இயக்குநர் விக்ரமன்.

Advertisement

Advertisement