நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான லத்தி படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள்.
இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், லத்தி சார்ஜ் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்,நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம்.
நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம். அவ்வளவுதான் . அதற்கு மேல் சொல்ல முடியாது.பள்ளியில் யோசிக்கமால் பொய் சொல்வது நான் தான்.
விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான்.நான் சமீபத்தில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை,பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனால் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான்.
இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்தால் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்ஷன் காட்சிகள்.அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நிச்சயம் அதை கட்டி முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அவர குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்
- நடிகை சாய்பல்லவியின் கார்கி திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் இத்தனை கோடியா?- குஷியில் படக்குழு
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!