வணங்கன் படப்பிடிப்பானது நீறத்தப்பட்டதை அடுத்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். 3டி-யில் உருவாக உள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷா பெதானி நடிக்க உள்ளதாகவும், சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா போர் வீரனாக நடிக்கு இந்த படம் பீரியட்-ஃபேண்டஸி டிராமாவாக எடுக்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அதாவது சமீப காலமாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்படி சில கயவர்களால் பகிரப்படுகிறது இதனால் படக்குழுவினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இப்படி பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாகவே இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது 'அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்' என்று தலைப்பிடப்பட்ட செய்தியில், "எங்கள் தயாரிப்பான #Suriya42 இன் படப்பிடிப்புத் தளங்களில் இருந்து சிலர் 'வீடியோக்கள் மற்றும் படங்களை' பகிர்வதை நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு வேலையும் முழு குழுவின் இரத்தத்தையும் வியர்வையும் உள்ளடக்கியது.
இந்தப் படத்தை அனைவருக்கும் பிரமாண்டமான திரையரங்க அனுபவமாகப் பரிசளிக்க விரும்புகிறோம்” மேலும் இப்படி வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீங்கள் நீக்கினால்/அகற்றினால் அது பெரும் உதவியாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில் அதைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து அவ்வாறு பகிர்பவர்கள் மீது 'பதிப்புரிமை மீறல்' கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதார்.
Listen News!