• Sep 21 2024

நான் பாடிய முதல் பாட்டிற்கு கிடைத்த சம்பளமே இவ்வளவு தான்- மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்!..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய காந்தக் குரலினால் ரசிகர்களின் மனதைக் கொள்கை கொண்ட நடிகர் தான் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கின்றார்.

இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத ரசனை மிகுந்த பாடல்களாகும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், விஜய், அஜித் என 3 தலைமுறை நடிகர்களுக்கு இவர் பாடியுள்ளார். இளையராஜாவின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘சினிமாவில் நான் முதன் முதலில் பாடிய பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என பலரும் நினைக்கிறார்கள்.


அதில் உண்மையில்லை. நான் முதலில் பாடியல் பாடல் வெளியாகவே இல்லை. அதன்பின் சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளையக்கன்னி’ பாடலை பாடினேன்.3 வருடங்கள் சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களில்தான் பாடினேன். எனக்கு 150 முதல் 250 வரை சம்பளம் கொடுப்பார்கள். 


‘ ஆயிரம் நிலவே’ பாடல் பாடியதற்கு ரூ.500 ஐ சம்பளமாக கொடுத்தார்கள். எனக்கு தலை சுற்றிவிட்டது. அதுதான் முதன் முதலில் வாங்கிய அதிக சம்பளம் ஆகும். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேராக டிரைவிங் ரெஸ்டாரண்ட் சென்று நானும் எனது நண்பரும் குலோப் ஜாமூன், மசால் தோசை, டபுள் ஸ்ட்ராங் காபி சாப்பிட்டு கொண்டாடினோம்’ என எஸ்.பி.பி. பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement