நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் இணைந்து நடித்துவரும் படம் ஏகே61.
இந்தப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பூனாவில் நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் இணையவுள்ளார் அஜித். இந்தப் படம் குறித்து இரு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் தற்போது விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளார்.
தற்போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்திவந்த விக்னேஷ் சிவன், தொடர்ந்து இந்த வேலைகளை துரிதப்படுத்தவுள்ளார். இதனிடையே, தனது பேட்டியொன்றில் அவர் அஜித்குமார் குறித்த சுவாரஸ்ய பதிவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஒரு படத்திற்காக வேலை செய்யும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அந்த வேலையை செய்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அதுபோன்று அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் எப்போதும் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதற்கொண்டு அந்தப் படத்தை தன்னுடைய படமாக நினைக்க வேண்டும் என்பது அஜித்தின் வெற்றி ரகசியம் என்றும் அதை தன்னுடைய படங்களில் இருக்குமாறு அஜித் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்
- விஜய்டிவியில் ஆரம்பிக்கப்படவுள்ள அண்டாக்கா கசம் என்னும் புதிய ஷோ- தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?
- கண்ணாண கண்ணே சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை- அடடே இவரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!