• Nov 17 2024

கண்மணி,மற்றும் பச்சையம்மாள் இரண்டு கேரக்டருக்கும் இடையேயுள்ள ஒற்றுமை இது தான்- மஞ்சுவாரியார் கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

துணிவு படத்தினை இயக்குநர் H. வினோத் இயக்கியிருப்பதோடு போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்துள்ளதோடு கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் நடைபெற்றது.


சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


 இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பேட்டியில், "துணிவு கண்மணி, அசுரன் பச்சையம்மாள் இரண்டு கேரக்டருக்கு இடையே உள்ள ஒற்றுமை & வேற்றுமை என்ன?" என்ற கேள்விக்கு "இரண்டு கதாபாத்திரமும் அவரவர் சூழலில் மிகவும் பலம் வாய்ந்த பெண்கள் என்பது ஒற்றுமை. இருவரும் கையாளும் விதம் வித்தியாசமானது." என மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement