• Sep 20 2024

வரலாறு முக்கியம் படத்தின் கதை இது தான்- ப்ரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசிய நடிகர் ஜுவா

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜுவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வரலாறு முக்கியம்.ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் பேசிய ஜுவா "SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குநர் மிகவும்  அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம்.


மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார்.

பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன்  பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. " என ஜீவா பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement